உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தமிழகத்தில் எரிபொருள் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்.!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
46 பார்வைகள்

வீண் பதற்றம் வேண்டாம் என மத்திய, மாநில அரசாங்கம் கூறியும், தமிழகத்தின் பல எரிபொருள் நிலையங்களில் மக்கள் மூன்றாவது நாளாக வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.இதன் காரணமாக தமிழகத்தில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் தமிழகம் முழுவதும் பரவியது.இதன்காரணமாக தமிழகம் முழுவதும் 3-வது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் வாகன சாரதிகள்; அலைமோதி வருகின்றனர்.

சென்னையில் தியாகராயநகர், அண்ணாநகர், மாம்பலம், இராயப்பேட்டை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன சாரதிகள் முந்தியடித்துக் கொண்டு தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பினர்.

வாகன சாரதிகள்; தங்களது வாகனத்தின் எரிபொருள் தாங்கியை முழுமையாக நிரப்பி கொண்டனர்.இதுதவிர குடிநீர் கேன், போத்தல்களிலும் பெட்ரோல், டீசல் வாங்கி சென்றனர்.எரிபொருள், டீசல் தட்டுப்பாடு இல்லை எனவும் எனவே மக்கள் அச்சப்படத்தேவையில்லை எனவும் இந்திய மத்திய, மாநில அரசுகள் முன்னதாக தெரிவித்திருந்தன.

தமிழகமெங்கும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0