உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கரூர் நெரிசல் சம்பவம்: விஜய்க்கு மீண்டும் அழைப்பாணை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
40 பார்வைகள்

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை டில்லியில் உள்ள மத்திய புலனாய்வு அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்தச் சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு முன்பும் இரண்டு முறை அழைப்பாணை அனுப்பப்பட்ட நிலையில், விஜய் டில்லியில் உள்ள அலுவலகத்தில் முன்னிலையாகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கின் மேலதிக விசாரணைக்காக நாளை முன்னிலையாகுமாறு மீண்டும்அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஆனால், விஜய் தரப்பில் விசாரணை திகதியை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விஜய் நாளை முன்னிலையாகி விசாரணைக்கு உட்படுவாரா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0