உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நாங்குநேரி இரட்டைக் கொலையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
41 பார்வைகள்

தமிழகத்தின் நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து கிராமத்தில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஒரு கும்பல் அரிவாளால் தாக்கியதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா மற்றும் பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜான் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.


இந்தச் சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 7 பேரை பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், மஞ்சங்குளம் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்வரை உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து, உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று நான்காவது நாளாகவும் தொடர்ந்தது.


இதேவேளை, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டாவின் உடல் ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், நாங்குநேரி சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆயிரம் கே. செல்வகுமார் முன்னிலையாகி, காரணமின்றி கொலை செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தகவல் பெற்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0