உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் மூன்றாவது போர்க்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் போர்க்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, 183 ஊழியர்களுடன் கூடிய இக்கப்பல் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் பாதுகாப்பாக நங்கூரமிடப்பட்டுள்ளது.

இக்கப்பல் மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கோரியிருந்த நிலையில், இந்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்திய நாட்களில் இந்து சமுத்திரத்தில் நடக்கும் நிகழ்வுகளுடன் தொடர்புடைய மூன்றாவது ஈரானிய கடற்படைக் கப்பல் இதுவாகும்.

இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளில் கலந்துவிட்டு திரும்பும் போது, இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ். டெனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்தது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாவது ஈரானிய கப்பலான IRIS Bushehr, தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியிருந்தது.

அதனைதொடர்ந்து, இலங்கை அரசு மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு அதன் பணியாளர்களைக் கொழும்புத் துறைமுகத்தில் வைத்து இறக்கிவிட்டுக் கப்பலை திருகோணமலை துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தது.

தற்போது மூன்றாவது ஈரானியப் போர்க்கப்பலான ‘IRIS Lavan’ இந்தியாவால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

ஒரே காலப்பகுதியில் இரு ஈரானியப் போர்க்கப்பல்களில் ஒன்று இலங்கையின் வசமும் மற்றொன்று இந்தியாவின் வசமும் இருப்பது சர்வதேச இராணுவ ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்க – ஈரான் மோதல் போக்கு நிலவும் சூழலில், தெற்காசிய நாடுகளான இலங்கையும் இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் ஈரானுக்கு உதவி வழங்கியுள்ளமை முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்தியா மற்றும் இலங்கையின் இந்த நகர்வுகள், பிராந்தியத்தின் இறையாண்மையை உறுதிப்படுத்துவதோடு, வல்லரசுகளின் நேரடி மோதல்களுக்கு மத்தியில் ஒரு நடுநிலைத் தன்மையைப் பேணும் முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0