உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மக்கள் குரலை ஒடுக்கவே அவசரகாலச் சட்டம் நீடிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

அரசுக்கு எதிராக எழும் மக்களின் போராட்டக் குரலை நசுக்கும் உள்நோக்கத்துடனேயே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. இதன்போது உரையாற்றிய அவர், அரசின் இந்த நடவடிக்கைக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்குப் பின்னணியில் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் அடக்குமுறை நோக்கமே காணப்படுகின்றது. மக்களின் உண்மையான கோரிக்கைகளைச் செவிமடுப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒடுக்குவதற்கே அரசு இச்சட்டத்தைப் பயன்படுத்துகின்றது.

தற்போது இச்சட்டத்தை நீடிக்க வேண்டிய எவ்விதத் தேவைப்பாடும் நாட்டில் இல்லை. இது தொடர்பாகப் பிரதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.

அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வந்த மக்கள் விடுதலை முன்னணியினர், தற்போது எரிபொருள் வரிசையைக் கட்டுப்படுத்தவும் போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்கவும் இச்சட்டம் அவசியம் என்பது போலப் பேசுவது வியப்பளிக்கின்றது.

மக்களுக்கு முறையான சேவைகளை வழங்க அவசரகாலச் சட்டம் அவசியம் இல்லை. அரசின் மீதான மக்கள் எதிர்ப்பைத் திசைதிருப்பவே இச்சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஜனநாயக ரீதியிலான குரலை ஒடுக்குவதற்காக அரசு எடுத்துள்ள இந்த முடிவை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0