உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நான்கு பெரிய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மகாராஷ்டிரா, முன்னேறிய தமிழகம்!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
50 பார்வைகள்

இந்தியாவின் நான்கு மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலம் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) அடிப்படையில் அந்த மாநிலமே இன்றும் முதலிடத்தில் உள்ளது.


2024–25 நிதியாண்டில் மகாராஷ்டிராவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.42,67,771 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கர்நாடகம், குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை விட அது பின்தங்கியுள்ளது.
கொரோனா காலத்திற்குப் பிந்தைய சூழலில் (2021–22 முதல் 2024–25 வரை), கர்நாடகம் சுமார் 65 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது.

பெங்களூரை மையமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளின் விரைவான வளர்ச்சியே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கர்நாடகத்தின் ஜிஎஸ்டிபி ரூ.17,02,227 கோடியிலிருந்து ரூ.28,09,063 கோடியாகஉயர்ந்துள்ளது.
தொழில் மற்றும் உற்பத்தித் துறையில் வலுவாக உள்ள குஜராத் மாநிலம் 48 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் பொருளாதார மதிப்பு ரூ.18,79,826 கோடியிலிருந்து ரூ.27,90,000 கோடியாக அதிகரித்துள்ளது.


மூன்றாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு சுமார் 47 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2021–22 ஆம் ஆண்டில் ரூ.21,36,351 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் ஜிஎஸ்டிபி, 2024–25 ஆம் ஆண்டில் ரூ.31,55,096 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த பொருளாதார அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0