உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவிடமிருந்து இந்தியாவுக்கு 30 நாள் விலக்கு!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
51 பார்வைகள்

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு வழங்கியுள்ளது.வளைகுடா பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்வதே இந்த தற்காலிக நடவடிக்கையின் நோக்கம் என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எரிசக்தி கொள்கைகளின் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் தொடர அனுமதிக்கும் வகையில் இந்த விலக்குவழங்கப்பட்டாலும், இது குறுகிய காலத்திற்கான நடவடிக்கை மட்டுமே என்றும், ரஷ்ய அரசுக்கு குறிப்பிடத்தக்க நிதி ஆதாயம் அளிக்காது என்றும் அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.
இந்தியா அமெரிக்காவின் முக்கிய பங்காளி நாடு என்றும், புது தில்லி அமெரிக்க எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளை கருத்தில் கொண்டு இந்த விலக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா தனது மசகு எண்ணெயின் சுமார் நாற்பது விழுக்காட்டை இப்பகுதியில் இருந்து இறக்குமதி செய்கிறது. அதில் பெரும் பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

42 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0