உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பூடான் மன்னரை சந்தித்தார் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
47 பார்வைகள்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் அண்டை நாடான பூடானுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்த பயணத்தின் போது, பூடான் தலைநகர் திம்புவில் அந்நாட்டு மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக்கை அவர் நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், பூடான் நாட்டின் நீதித்துறையை மின்னணு மயமாக்குவதற்காக தொழில்நுட்ப உதவிகளையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக தலைமை நீதிபதி சூர்ய காந்த் உறுதியளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கிடையிலான கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் அறிவியல் சார்ந்த உறவுகள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடி, அந்தப் பிணைப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

42 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0