உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
34 பார்வைகள்

இந்தியா முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் வண்ணப் பொடிகளை ஒருவர்மீது ஒருவர் தூவி, வண்ண நீரைப் பீச்சி, திலகம் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடினர்.
புராண வரலாற்றின் அடிப்படையில் ஹோலி பண்டிகைக்கு முன்பாக ‘ஹோலிகா தஹன்’ என்ற சடங்கு நடைபெறுகிறது.

இதற்காக நகரங்களிலும் கிராமங்களிலும் முக்கிய சந்திப்புகளில் காய்ந்த மரக்கிளைகளை சேகரித்து குவிக்கின்றனர். பண்டிகை நாள் அதிகாலையில் சிறப்பு பூஜை செய்த பின் அந்த விறகுகள் எரிக்கப்படுகின்றன. தீ எரியும்போது மக்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து, அந்தத் தீயை வீட்டிற்கு கொண்டு சென்று அடுப்பை மூட்டுவது வழக்கம்.
இந்தச் சடங்குடன் ஹோலி பண்டிகை தொடங்குகிறது.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் ஹோலி பண்டிகைமிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு சுமார் பத்து நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்கள் தொடங்கிவிடுகின்றன. பிருந்தாவனில் உள்ள புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கிருஷ்ணர் கோயிலில் நடைபெறும் வண்ண மழை ஹோலி உலகப் புகழ் பெற்றதாகும்.


பர்ஸானா பகுதியில் பெண்கள் ஆண்களைத் தடியால் அடித்து விளையாடும் பாரம்பரிய ஹோலியும் சிறப்பாக நடைபெறுகிறது. சில பகுதிகளில் மறுநாள் சேற்று மண் வீசி ஹோலி கொண்டாடும் வழக்கமும் உள்ளது.
உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை தனித்துவமான முறையில் கொண்டாடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

42 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0