உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
61 பார்வைகள்

உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடியின் விளைவாக, இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னணி எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனங்களான கேயில் மற்றும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியவை தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தை 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைத்துள்ளன.


இந்தியாவின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி நிறுவனம் விநியோகத் தட்டுப்பாடு தொடர்பில் ஏனைய நிறுவனங்களுக்கு முன்கூட்டியே அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.உலகின் முன்னணி திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி நாடான கத்தார் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டில் உற்பத்தி தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


திரவ இயற்கை எரிவாயு இறக்குமதியில் உலகின் நான்காவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. கத்தாரிலிருந்துஅதிகளவில் எரிவாயுவை பெற்றுவரும் இரண்டாவது பெரிய நாடாகவும் இந்தியா குறிப்பிடப்படுகிறது.பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவசரகால அடிப்படையில் உடனடி கொள்முதல் நடைமுறையின் மூலம் எரிவாயுவை வாங்கத் திட்டமிட்டுள்ளன.


தற்போதைய போர்ச் சூழ்நிலை காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலை, கப்பல் போக்குவரத்து செலவு மற்றும் காப்புறுதி கட்டணங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.விநியோகக் குறைப்பானது ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வழங்கல் அளவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன் மூலம் விநியோக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் செலுத்த வேண்டிய சட்டச் சிக்கல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

42 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0