உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அயத்துல்லா அலி காமேனி மறைவு: கர்நாடகாவின் அலிப்பூரில் துக்க அஞ்சலி.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
49 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தில் உள்ள அலிப்பூர் கிராமத்தில் துக்க அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அலிப்பூரில் 30,000-க்கும் அதிகமான ஷியா முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.

அயத்துல்லா அலி காமேனி 1980 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் இக்கிராமத்திற்கு இருமுறை வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போதைய வருகையின் போது, அங்குள்ள மக்களுக்காக சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.அவரது வருகையைத் தொடர்ந்து, ஈரான் அரசின் ஆதரவுடன் அலிப்பூரில் காமேனி பெயரில் ஒரு மருத்துவமனை நிறுவப்பட்டது.

இன்றளவும் இயங்கி வரும் அந்த மருத்துவமனை மூலம் உள்ளூர் மக்கள் பலனடைந்து வருகின்றனர். இதன் பின்னர் அலிப்பூர் மக்களுக்கும் ஈரானுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாகவும், தற்போது அங்கிருந்து 150 முதல் 200 பேர் வரை ஈரானில் பணியாற்றி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.


காமேனியின் மறைவைத் தொடர்ந்து, அலிப்பூரில் மக்கள் கருப்பு உடை அணிந்து ஊர்வலமாகச் சென்றனர். அந்த ஊர்வலத்தின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மூன்று நாட்கள் கடைகள் மற்றும் வணிக நிலையங்களை மூடி துக்கம் அனுசரிக்க தீர்மானித்ததாக வணிகர்கள் அறிவித்துள்ளனர். ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

42 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0