உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நாக்பூர் தொழிற்சாலை வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
49 பார்வைகள்

மகாராஷ்டிர மாநிலம் கட்டோல் பகுதியின் ரவுல்கான் பகுதியில் இயங்கி வரும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலையில் நேற்று காலை திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்க மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான வெடிபொருட்கள் தயாரிக்கும் இத்தொழிற்சாலையின் டெட்டனேட்டர் பொதி பிரிவில் காலை 7 மணி முதல் 7.15 வரை வெடி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்து நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

42 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0