உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கனடா பிரதமர் இன்று இந்தியா வருகை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
68 பார்வைகள்

மார்க் கார்னி நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா–கனடா இடையிலான நட்புறவு நீண்டகாலமாக நிலவியிருந்தாலும், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆட்சிக்காலத்தில் இருநாடுகளுக்கிடையே உறவில் பதற்றம் ஏற்பட்டது.


2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அப்போது பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதனால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டது.

பின்னர் ஆளும் லிபரல் கட்சி உள்ளக எதிர்ப்புகள் அதிகரித்ததையடுத்து, 2025 மார்ச் மாதத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர் மார்க் கார்னி புதிய பிரதமராகப் பதவியேற்றார். அதன் பின்னர் இந்தியா–கனடா உறவில் முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.


சில மாதங்களுக்கு முன்பு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.இந்நிலையில், இன்று மும்பையில் தரையிறங்கும் மார்க் கார்னி, இன்றும் நாளையும் பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் தொழில்துறை நிபுணர்களைச் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0