உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு: சசிகலாவை கண்டித்த கே.பி. முனிசாமி.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
66 பார்வைகள்

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்துவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனிசாமி தெரிவித்துள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எழுபத்தெட்டாவது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசியலில் ஈடுபடமாட்டேன் என எழுத்து மூலம் அறிவித்துவிட்டு மீண்டும் அரசியலுக்கு வந்தவர் சசிகலா என குறிப்பிட்டார்.


“கட்சியின் உழைப்பை பயன்படுத்தி கோடிக்கணக்கான சொத்துகளைச் சேர்த்த குடும்பம் இன்று எடப்பாடி பழனிசாமி மீது கொலை முயற்சி பழி சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. தர்மம் தன் கடமையைச் செய்ததால்தான் அவர் சிறை சென்றார்” என அவர் கூறினார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் ஐம்பத்தாறு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், போதைப்பொருட்கள் எளிதில் கிடைப்பதே இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபடக் காரணம் என குற்றஞ்சாட்டினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டிருப்பதால் கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களை மறைக்க காவல்துறை முயற்சி செய்கிறது என்றும் தெரிவித்தார்.


அத்துடன், மக்களின் நலனைப் பற்றி சிந்திக்காமல் தனது குடும்ப வருமானம் மற்றும் அடுத்த முதலமைச்சர் பதவி குறித்தே முதலமைச்சர் சிந்தித்து வருகிறார் என்றும் கே.பி. முனிசாமி குற்றஞ்சாட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0