மேகாலயாவில் எச்ஐவி நிலை குறித்து சுகாதார அமைச்சர் விளக்கம்.!
மேகாலயா சட்டப்பேரவையில் எச்ஐவி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சர் டபிள்யூ. ஷில்லா பதிலளித்தார்.
அவர் தெரிவித்ததாவது: நாட்டிலேயே மேகாலயாவில் எச்ஐவி பாதிப்பு அதிகமாக உள்ளது. மாநிலத்தில் தற்போது 10,293 பேர் எச்ஐவி தொற்றுக்கான ஆன்டி-ரெட்ரோ வைரல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையை கட்டுப்படுத்த 5 ஆண்டு திட்டத்திற்காக அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் எச்ஐவி/எய்ட்ஸ் காரணமாக 749 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அமைச்சர் கூறினார்.
மேகாலயாவில் 392 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நான்கு மொபைல் மையங்களும் இயங்குகின்றன. எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் சுகாதாரத் துறையால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.