உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

திருப்பதி நெய் கலப்படம் விவகாரம்: சட்டமன்றத்தில் மூன்று மணி நேரம் விவாதம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
47 பார்வைகள்

திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் நெய்யில் கலப்படம் செய்து லட்டு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சுமார் மூன்று மணி நேரம் தீவிர விவாதம் நடைபெற்றது.


முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தியதாகவும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2019 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் சுமார் 59.71 லட்சம் லிட்டர் கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.231 கோடிக்கு மேல் நிதி முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நெய்யில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் கொழுப்பு கலந்திருந்ததாகவும், அது தொடர்பான அறிக்கைகளின் அடிப்படையிலேயே தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்தார்.


இவ்விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனங்களின் பெயர்களும் பேரவையில் குறிப்பிடப்பட்டன. ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையில், துணை முதல்வர் பவன் கல்யாண் பேசுகையில், கலப்பட நெய் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பான இந்த விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை நிலைமை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0