உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
47 பார்வைகள்

கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.7.85 கோடி செலவில் கட்டப்பட்ட 90 புதிய குடியிருப்புகள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டன. முகாம்வாழ் தமிழர்களே இக்குடியிருப்புகளை திறந்து வைத்தனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் பெருமாள்புரம் மற்றும் பழவிளை, விளவங்கோடு வட்டத்தில் கோழிவிளை மற்றும் ஞாரான்விளை ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் சுமார் 1,200 பேர் வசித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு, முகாம்வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாதாந்திர நிதியுதவி, இலவச அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள், இலவச மின்சாரம், ஆண்டுதோறும் உடை மற்றும் பாத்திரங்கள் வழங்கி வருகிறது. மேலும், தையல், ஓவியம் உள்ளிட்ட திறன்மிகு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மானியக் கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன.


முன்னதாக பெருமாள்புரத்தில் ரூ.6.77 கோடி செலவில் 100 வீடுகளும், பழவிளையில் ரூ.4.66 கோடி செலவில் 72 வீடுகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வின்போது முகாம்வாழ் தமிழர்கள், புதிய வீடுகள் தரமானதாக அமைக்கப்பட்டுள்ளதற்கும், அரசு வழங்கி வரும் நலத்திட்ட உதவிகளுக்கும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், நியாயவிலைக் கடை மற்றும் சமுதாய நலக் கூடம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதனை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.நிகழ்வில் சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு, பால்வளத் துறை அமைச்சர் த. மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0