உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஜெயலலிதா பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழாரம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
49 பார்வைகள்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் எழுபத்தெட்டாவது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பதிவில், ஜெயலலிதா மனம் கவர்ந்த தலைவராகவும், தலைசிறந்த நிர்வாகியாகவும் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்க்கைப் பயணம் அசாதாரண மனஉறுதி மற்றும் தீர்மானத்தால் அமைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.தமிழக முதலமைச்சராக இருந்த காலத்தில் பெண்கள் அதிகாரமளிப்பு, சமூக நீதி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களை முன்னிறுத்திய சிறந்த ஆட்சியாளராக அவர் திகழ்ந்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

கருணை மற்றும் உறுதி ஆகிய இரு பண்புகளையும் ஒருங்கே கொண்ட தலைவராக அவர் விளங்கினார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வதாகவும், தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் அவரைப் பற்றி பகிர்ந்த கருத்துகளையும் இணைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0