உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தி.மு.க.வுக்கு நேரடி சவால் விடுத்த விஜய்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
54 பார்வைகள்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தனக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையிலான அரசியல் போட்டியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அணுகுமுறை தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.


முன்னதாக, தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் தி.மு.க.வுக்கும் நேரடி போட்டி என அவர் கூறி வந்த நிலையில், தற்போது போட்டியை இரு தலைவர்களுக்கு இடையிலான நேரடி மோதலாக சித்தரித்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது” எனக் கூறி நிர்வாகிகளிடம் உறுதிமொழி பெற்றார்.

பின்னர் ஒரு குட்டிக் கதையை எடுத்துரைத்து, பிரச்சினைகளை சரியான அணுகுமுறையுடன் சமாளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியை விமர்சித்த அவர், மக்கள் எதிர்பார்த்த நல்ல தலைமையில்லாததால் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறினார்.

தங்கள் இயக்கம் மக்களுக்கு மாற்று சக்தியாக உருவாகியுள்ளதாகவும், ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக சென்று மக்களை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், வரவிருக்கும் தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன என்றும், இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆட்சிக்கும் இடையிலான தேர்வாக அமையும் என்றும் விஜய் கூறினார். தி.மு.க. ஆட்சியை “தீய சக்தி” என விமர்சித்த அவர், தனது கட்சியை “நல்ல சக்தி” என குறிப்பிட்டார்.


அரசியல் ஆய்வாளர்கள், பிரசாரத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பாணியில் முன்னெடுக்க விஜய் முயற்சிக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். இருப்பினும், தற்போதைய அரசியல் சூழலில் அவருடைய அணுகுமுறை எவ்வாறு பலனளிக்கும் என்பது தேர்தல் காலத்தில்தான் தெளிவாகும் எனக் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0