உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மீண்டும் இருண்ட காலம் உருவாக இடமளிக்காதீர்கள் – மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு கோடீஸ்வரன் எம்.பி. கடும் எதிர்ப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் உருவாகக் கூடாது எனவும், அதனைத் தடுக்கும் வகையில் அரசு முறையான வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ‘வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்’ தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,“நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 13.8 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரைசெய்துள்ளது. இவ்வாறான கட்டண உயர்வு அடிமட்ட மக்கள்மீதே கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதனால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.கடந்த காலப் பொருளாதார நெருக்கடிகளால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. அத்தகைய இருண்ட காலம் மீண்டும் உருவாக அரசு இடமளிக்கக் கூடாது.


தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக மின்சார சபைக்கு 5 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகளின் தவறுகளால் ஏற்படும் இந்நட்டத்தை ஏழை மக்களின் மீது சுமத்துவது நியாயமற்றதாகும். எனவே, நிலக்கரி இறக்குமதியில் வெளிப்படையானமற்றும் பொறுப்புணர்வுள்ள நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம்.


தற்போது பெய்து வரும் மழையினால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர்த்த முடியாத நிலை காரணமாக விற்பனை செய்ய இயலாமல் திணறுகின்றனர். ஆகையால், பிரதேச ரீதியாக நெல் உலர்த்தும் இயந்திரங்களை நிறுவுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமது சொத்துக்களை அடகு வைத்தும் விற்றும் விவசாயத்தில் ஈடுபடும் இவர்களுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு, நெல் உலர்த்தும் இயந்திரங்களுக்கான மின்சாரத்தை மானிய அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் முன்வர வேண்டும்,” என வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

80 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0