உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடனைச் செலுத்திய பின்னரும், சம்பந்தப்பட்ட கந்துவட்டி கும்பல் தொடர்ந்து பணம் கோரி மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் இன விடுதலைக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் எதிராக தமது இளமைக் காலத்தை முழுவதும் அர்ப்பணித்த முன்னாள் போராளிகள், இப்போது குடும்ப வாழ்க்கையில் கடுமையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.அன்றாட வாழ்வாதாரச் சுமையை தாங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத காரணத்தால், பலர் கடன் மற்றும் சீட்டு போன்ற வழிகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலையைச் சுரண்டி, வட்டி மேல் வட்டி விதித்து ஏமாற்றும் கந்துவட்டி கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன.


அதன் விளைவாகவே, மண்ணுக்காக போராடிய இந்தப் பெண் போராளி தனது சிறுநீரகத்தை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவமாகும்.கவலைக்குரிய விடயம்விடயம் என்னவென்றால், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கந்துவட்டி கும்பலும் கைது செய்யப்படவில்லை. மாறாக, வறுமையால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியையே சமூகத்தின் ஒரு பகுதி விமர்சித்து வருகின்றது.


கடன் தொல்லையால் தமிழர் பகுதிகளில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு பெண்ணுக்கே நேர்ந்த துயரம் அல்ல; ஒவ்வொரு தமிழ் மற்றும் இலங்கை குடிமகனுக்கும் நேர்ந்த அவலமாகும்.எனவே, இச்சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த ஜனநாயக நாட்டில் கந்துவட்டி நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி, கந்துவட்டி இல்லாத நியாயமான சமூகத்தை உருவாக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனநாயக தமிழ்தேசிய மக்கள் கூட்டணி இணைத் தலைவராகவும் செயல்படும் வேந்தன், முன்னாள் போராளிகளின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரிதமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

80 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0