உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணை கோரி 3287 நாட்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
54 பார்வைகள்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (20.02.2026) காலை 10 மணியளவில் A9 வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர், முள்ளிவாய்க்காலில் நடந்த இன ஒடுக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியை பெறுவதற்கான போராட்டம் இன்றுடன் 3287 நாட்களாக தொடர்கிறது.

இந்த போராட்டத்தில் பல தாய்மார்கள், உறவுகள் இறந்து விட்டனர்; மீதமுள்ளவர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான சரியான தகவல்களை அறிய முன்னெடுக்கும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தியை கடந்து மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் போராட்டம் நிறைவடைந்தது.

தங்களின் கோரிக்கைகள்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குசர்வதேச நீதி வழங்குதல், தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை, பயங்கரவாதம் தடுக்கும் சட்டங்கள்[P.T.A மற்றும் PSTA] நீக்கம், வட கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படல், மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு சர்வதேச நிபுணர்கள் தலையீடு, பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் நிறுத்தம், பெளத்த மயமாக்கல் நிறுத்தம், மற்றும் அனைத்து வகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் ஆகியவை ஆகும்.போருக்குப் பிறகு 16 ஆண்டுகள் கடந்தும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் நீதி பெற முடியாமல் இருப்பதை நினைவூட்டி, சர்வதேச சமூகத்திடம் இச்சம்பவத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

51 0 0
இலங்கை செய்திகள்

நுகர்வோருக்கு நிவாரணம்; வியாபாரிகளுக்கு புதிய நம்பிக்கை.!

இந்நாட்களில் பேலியாகொடை பிரதான மத்திய மீன் சந்தையின் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாய் தெற்கு மாகாணக் கடற்றொழில் மூலமும் அதிகளவிலான மீன், சந்தைக்கு…

55 0 0
இலங்கை செய்திகள்

விவசாயக் கடன் தருவதாகக் கூறி நிதி மோசடி; சந்தேகநபர் கைது.!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களை குறிவைத்து நுன் கடன் தருவதாக கூறி முற்பணம் வங்கியில் வைப்பிலிட கூறி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு…

49 0 0