உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டு

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை, இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகும் எனத் தெரிவித்து, இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் நடைபெற்றதாக குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடலில் பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் விகாராதிபதி கலந்து கொண்டபோதும், காணிகளை இழந்த மக்கள் அழைக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்கும் அரசுக்கும் அல்லது பௌத்த மதத்திற்கும் தொடர்பில்லை என்றும், இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டது இலங்கை இராணுவம் என்பதையே சுட்டிக்காட்டினார்.

அக்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா இந்த விகாரை அமைப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.“இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் மற்றொரு கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை. எனவே, அரசு இந்த விவகாரத்தில் நீதியான முறையில் தலையிட்டு, காணி உரிமைகளை மக்களுக்கே மீள வழங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, இவ்வாறான செயல்களுக்கு துணைபோகக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

38 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

54 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0