உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவனம் வீதிகளை அகழ்ந்து நன்னீர் குழாய்களை அமைக்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படும் வீதிகளுக்கு அருகில் வீதிகளை அகழ்ந்து குழாய்களை அமைத்து வருகின்றனர்.

குழாய்களை அமைத்த பின் குறித்த வீதிகளை புனர்நிர்மானம் செய்யாமல் அலட்சியமாக விட்டு செல்கின்றனர்.இதனால் வடமராட்சி கிழக்கில் உள்ள பல உள்ளக வீதிகள் பெரும் சேதத்துக்குள்ளாகி பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.இந்நிலையில் இன்று (20) உடுத்துறை வேம்படி பகுதியில் எந்த வித அனுமதியும் இன்றி அப்பகுதி மக்களுக்கு உரிய முறையில் அறிவித்தல் வழங்கப்படாமல் கனரக இயந்திரங்களை கொண்டு மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் குடி நீர் குழாய் அமைப்பதற்கு பாரிய பள்ளம் தோண்டியுள்ளனர்

வெளியில் சென்ற அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சம்பவம் அறிந்து தமது வீட்டை வந்து பார்வையிட்ட போது சுற்று மதில்கள் சேதமடைந்துள்ளதுடன்,வெடிப்பு விழுந்து காணப்படுவதால் சுற்று மதில்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் கோபமடைந்த மக்கள் முன் அறிவிப்பு இன்றி குறித்த வேலையை செய்ததால் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கான நன்னீர் திட்ட மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பரிதாவின் மேற்பார்வையில்தான் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

52 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

54 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

55 0 0