உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
10 சனி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
54 பார்வைகள்

வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில் வடக்குமாகாண ஆளுநர் ஊடாக வடக்குமாகாணத்தில் நிலவும் சீரற்ற ஆசிரியவளப் பற்றாக்குறையைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரால் இதன்போது பதில் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் குழு அறையில் 20.02.2026 இன்று இடம்பெற்ற கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த கூட்டத்தில் தம்மால் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,நாடாளுமன்றில் 17.02.2026நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தின் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கான அறிவித்தல் கடந்த 2026.02.02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி ஊடாக வெளியாகியது.குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கர்நாடக சங்கீதம், இந்து நாகரீக பாடங்களில் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வடமாகாணத்துக்கான விண்ணப்பம் கோரப்படாமலிருந்தது.இந்நிலையில் கடந்த 17.02.2026அன்று வடமாகாணத்தில் கர்நாடக்சங்கீதம் மற்றும் இந்துநாகரீக பாடங்களுக்கான ஆசிரிய நியமன விண்ணப்பங்கள் கோரப்படவேண்டுமென கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.

இத்தகையசூழலில் கடந்த 18.02.2026ஆம் திகதிய வர்த்தமானிமூலம் வடமாகாணத்திற்கு இந்துநாகரீகபாடத்திற்கான ஆசிரிய நியமன விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே அதற்கான கல்வி அமைச்சிற்கு குறித்த கூட்டத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்திருந்தேன்.எனினும் மாகாண அடிப்படையில் இந்துநாகரீக பாடத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட 125 ஆசிரியர்களில் 93 ஆசிரியர்களே தற்போதிருப்பதாக வடமாகாணக் கல்வித்திணைக்களத்தின் புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுவதையும், இந்து நாகரீக பாடத்தில் வடமாகாணத்தில் 75சதவீத ஆசிரியர்களே காணப்படுவதையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.

மேலும் யாழ்ப்பாணத்தில் 89சதவீத ஆசிரியர்கள் காணப்படுகின்ற போதும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 50சதவீத ஆசிரியர்கள், வவுனியா மாவட்டத்தில் 64சதவீத ஆசிரியர்களே உள்ளார்கள் என்பதை எடுத்துக்கூறியதுடன், இந்தப் புள்ளிவிபரம் வடமாகாணத்தில் சீரற்ற ஆசிரியர் வளப்பரவலாக்கத்தை வெளிக்காட்டுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.அதேவேளை வடமாகாணத்தில் கர்நாடக சங்கீதத்திற்குரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளணி 476. தற்போதுள்ள ஆளணி 506.அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 132சதவீதமான கர்நாடகசங்கீத ஆசிரியர்களும், கிளிநொச்சி 92சதவீதமான ஆஙிரியர்களும், மன்னார் 72 சதவீதமான ஆசிரியர்களும், வவுனியா 60சதவீத ஆசிரியர்களும முல்லைத்தீவு 85சத வீத ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.

கர்நாடக சங்கீத பாடத்திற்கு வடமாகாணத்தில் 30 ஆசிரியர்கள் மிகையாக உள்ள போதும், யாழ்ப்பாணத்தில் மட்டும் 81 ஆசிரியர்கள் மிகையாக உள்ளனர். ஆனால் வன்னிப்பெருநிலப்பரப்பில் உள்ள 6 கல்வி வலயங்களில் 46 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இது வன்னிமாவட்ட பிள்ளைகளுக்கு நேரும் அநீதி என்பதையும் குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன்.இத்தகையசூழலில் வன்னியிலுள்ள எமது பிள்ளைகள் பாடத்திற்கு ஆசிரியர்கள் இன்றி கலைத்திறன் பெற வழியற்று இரும்நிலையில், யாழ்ப்பாணத்தில் 81 கர்நாடக சங்கீத ஆசிரியர்கள் மிகையாக உள்ளனர் என்பவற்றைச் சுட்டிக்காட்டி இந்த சமச்சீரற்ற வளப்பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறும் வலியுறுத்தியிருந்தேன்.

மேலும் முல்லைத்தீவில் 08 கர்நாடக சங்கீத ஆசிரியர்கள் தேவையாக உள்ள நிலையில் 16 இற்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத பட்டதாரிகள் முல்லைத்தீவில் மட்டும் உள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், கர்நாடக சங்கீதத்திற்கான ஆசிரிய ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டால் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவையை முல்லைத்தீவு மாவட்ட ஆளணியைக் கொண்டே நிறைவு செய்ய இயலும் என்பதையும் இதன்போது கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.எது எவ்வாறாயினும் வடமாகாணத்தில் காணப்படும் சமச்சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை இதன்போது மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் இந்த சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்க விடயத்தில் வடக்குமாகாண கல்வி அமைச்சிலேயே குறைப்பாடுகள் இருப்பதாக இதன்போது தெரிவித்தார்.எனவே தாம் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி இந்த சமச்சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தைச் சீர்செய் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் தமக்கு பதில் வழங்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மை…

91 0 0
இலங்கை செய்திகள்

உலக முட்டை தினம் :நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கும் விசேட சமூக நலன்புரி நிகழ்வு வெள்ளிக்கிழமை (09)…

54 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள் மற்றும் முரண்பாடான…

16 0 0
இலங்கை செய்திகள்

மருதமுனை கடற்கரையில் ஆண் ஒருவரின் சட@லம் மீட்பு

மருதமுனை கடற்கரை ஓரத்தில் வெள்ளிக்கிழமை (09) மாலை 66 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பெரியநீலாவணைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த…

76 0 0