உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டச் சிக்கல்கள் நீக்கப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு விடுத்துள்ள சவாலுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன உரிய முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, “பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திப் பாருங்கள். அதில் நாங்களே வெற்றி பெறுவோம்” என்று அரசுக்குச் சவால் விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பேராசிரியர் அபயரத்ன குறிப்பிட்டதாவது,
“தேர்தல்களைக் கண்டு இந்த அரசு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தடையாக இருந்த சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதிலேயே நாம் தற்போது கவனம் செலுத்தி வருகின்றோம்.

கடந்த காலங்களில் தேர்தல்களைத் தள்ளிப்போட்டவர்கள் இன்று எம்மைப் பார்த்து சவால் விடுப்பது வேடிக்கையானது. உரிய ஜனநாயக முறைப்படி, குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அன்றி, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படாத வகையில் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் செல்வாக்கு என்ன என்பது தேர்தல் களத்தில் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.” – என்றார்.

மேலும், மாகாண சபைத் தேர்தலுக்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், விரைவில் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

5 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

54 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0