உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
90 பார்வைகள்

ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 160 மில்லியன் டொலர்கள் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை (19) தெரிவித்துள்ளது. இந்த நிதி ஐ.நா.வின் வழக்கமான செயல்பாட்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.


இதேவேளை, நிதி நெருக்கடியில் உள்ள உலக அமைப்புக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் நிதியை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அமெரிக்கா ஐ.நா. பட்ஜெட்டில் மிகப்பெரிய பங்களிப்பாளராக இருப்பினும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் வழக்கமான மற்றும் அமைதி காக்கும் பட்ஜெட்டுகளுக்கு பணம் செலுத்த மறுத்துவிட்டது. மேலும், ஐ.நா. நிறுவனங்களுக்கு அவர்களின் சொந்த பட்ஜெட்டுடன் தன்னார்வ நிதியையும் குறைத்துள்ளது.

2026 பெப்ரவரி தொடக்கத்தில் அமெரிக்கா வழக்கமான ஐ.நா. பட்ஜெட்டுக்கு 2.19 பில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது உலகளவில் நாடுகள் செலுத்த வேண்டிய மொத்தக் கடனில் 95% க்கும் அதிகமாகும். தற்போதைய மற்றும் கடந்த கால அமைதி காக்கும் பணிகளுக்காக மேலும் 2.4 பில்லியன் டொலர்கள், ஐ.நா. அமைப்பின் கீழ் இயங்கும் சர்வதேச நீதிமன்றங்களுக்கு 43.6 மில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

டெல்லியில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் அதிகாரியின் இராஜினாமாவை வலியுறுத்தியும் உயர் நீதிமன்றத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய டெல்லியில் பலத்த…

42 0 0
உலக செய்திகள்

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் புதி கண்டகி (Budhi Gandaki) நதிப் படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ள நீர் ஆறு பாலங்களை…

61 0 0
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்: ஒருவர் ப@லி, 11 பேர் காயம்!

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள ‘மன்னர் காலித்’ சர்வதேச விமான நிலையத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…

87 0 0
உலக செய்திகள்

பாப்பரசர் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை!

பரிசுத்த பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கண்டறியப்பட்ட சிறிய கட்டியை அகற்றுவதற்காக, எதிர்வரும் நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. ரோமில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில்…

53 0 0