உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாகிஸ்தானின் கராச்சியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
48 பார்வைகள்

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் நேற்று இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரமழான் நோன்பு தொடங்கிய முதல் நாளையொட்டி, அதிகாலை நேரத்தில் மக்கள் உணவு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நோன்பு ஆரம்பிக்கும் முன் ஸஹர் உணவுக்காக பல வீடுகளில் சமையல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.

வெடிப்பின் தாக்கம் காரணமாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் முழுமையாக இடிந்து சரிந்துள்ளது. இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கினர்.இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புக் குழுக்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவுகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ரமழான் நோன்பு தொடங்கிய முதல் நாளிலேயே ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

85 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0