உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உபாதையால் நீக்கப்பட்ட மதீஷவுக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க இணைப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
57 பார்வைகள்

டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் மூன்றாவது மாற்றமாக, உபாதைக்கு உள்ளான மதீஷ பதிரணவுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான குழுநிலைப் போட்டியின்போதே பதிரணவின் கெண்டைக்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் உடல் தகுதி பெற பல வாரங்கள் தேவை என்பதால், அவர் டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து நீக்கப்பட்டார்.


25 வயதான மதுஷங்க இதுவரை இலங்கை சார்பில் 15 டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அண்மைக் காலத்தில் உபாதை காரணமாக அவர் தொடர்ச்சியாக அணியில் இடம் பெற முடியவில்லை. முன்பே, டி20 உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் முன்னரே வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்கும் உபாதையால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்; அவருக்கு பதிலாக பிரமோத் மதுஷான் இணைக்கப்பட்டார். தொடர்ந்தும், காயத்துக்கு உள்ளானவனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக துஷான் ஹேமந்த் அழைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஜிபூட்டியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து : சிறுவர்கள் உட்பட 109 பேர் ப@லி

ஆபிரிக்க நாடான ஜிபூட்டி கடற்கரைப் பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்…

44 0 0
உலக செய்திகள்

டெல்லியில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் அதிகாரியின் இராஜினாமாவை வலியுறுத்தியும் உயர் நீதிமன்றத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், மத்திய டெல்லியில் பலத்த…

42 0 0
உலக செய்திகள்

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் புதி கண்டகி (Budhi Gandaki) நதிப் படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ள நீர் ஆறு பாலங்களை…

61 0 0
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்: ஒருவர் ப@லி, 11 பேர் காயம்!

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள ‘மன்னர் காலித்’ சர்வதேச விமான நிலையத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…

87 0 0