உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மருத்துவத்துறையில் எட்டு தங்கப்பதக்கங்களை பெற்ற மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் .!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார்.யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட மாணவர்கள் ஐவருக்குத் தங்கப் பதக்கங்கள், சிறப்புப் பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர் அந்தவகையில் நற்குணம் அபிராமி, அச்சுதன் கபிலன் , சுப்பையா துர்க்கா ,பாத்திமா அகிலா மற்றும் முகமட் பாத்திமா சபீயா ஆகியோர் தங்க பதக்கங்களை பெற்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (19) வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கெளரவிக்கப்படவும் உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

2 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0