உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கரைத்துரைப்பற்று பிரதேச சபை தொடர்பில் தமிழரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டம், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை நீக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தடுக்கக் கோரி முன்னாள் தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்தில், விசாரணை நிறைவடையும் வரை தமது பதவிக்குப் பிறிதொரு உறுப்பினரை நியமிப்பதைத் தடுக்க இடைக்காலத் தடை உத்தரவை மனுதாரர் பெற்றிருந்தார்.இன்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர் மனுதாரரான தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா அனுசரணையுடன் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் முன்னிலையாகி வாதிட்டார்.


இவ்வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சின்னராசா யோகேஸ்வரனின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே பதவியில் இருந்து விலக்கப்பட்ட யோகேஸ்வரனின் இடத்துக்கு புதிய உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

1 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0