உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நைஜீரியாவில் வெடித்துச் சிதறிய சுரங்கம் – தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
65 பார்வைகள்

நைஜீரியா,ப்ளாட் டியூ மாகாணம், வேஸ் பகுதியிலுள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேற்படி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கார்பன் மொனாக்சைட் எனும் விஷவாயு கசிந்ததில் அப் பகுதியில் திடீரென தீப் பரவி வெடித்துச் சிதறியுள்ளது.

சம்பவம் அறிந்து அப் பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 38 தொழிலாளர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.இச் சம்பவத்தில் படுகாயமடைந்த 27 பேர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

85 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0