உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரிட்டிஷ் தம்பதியருக்கு ஈரானில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
55 பார்வைகள்

உளவு பார்த்த குற்றச்சாட்டில், பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் ஆகியோருக்கு ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.இந்த ஜோடி 2025 ஜனவரி 3-ஆம் திகதி மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது கைது செய்யப்பட்டார், பின்னர் அவர்களுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால், தம்பதியர் இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ளனர்.


கடந்த ஒக்டோபர் மாதத்தில், தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர நீதிமன்றத்தில் மூன்று மணி நேரம் நீடித்த விசாரணையில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். ஆனால், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குடும்பத்தார் தெரிவித்தார்.குடும்பத்தார் கூறியதாவது,

இந்தத் தண்டனை “ஈரானில் இங்கிலாந்து குடிமக்கள் மீதான மிகக் கடுமையான அரசியல் நோக்கம் கொண்ட தடுப்புக் காவல் நடவடிக்கை” எனும் வகையிலாகும். எனவே, அவர்களை விடுதலை செய்ய இங்கிலாந்து அரசாங்கம் விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.மேலும், ஈரானிய அதிகாரிகளால் உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் குடும்பத்தார் குறிப்பிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

85 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0