உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
82 பார்வைகள்

தமிழக சட்டசபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் சென்னைக்கு வருகை தருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மத்தியில், மார்ச் 6ஆம் திகதி தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தலும் நடைபெற உள்ளது.சென்னையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மூலம் வாக்களிக்கும் முறை மற்றும் வாக்கை உறுதிப்படுத்தும் செயல்முறைகள் குறித்து மாவட்ட அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0