உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
10 சனி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் இறுதி முடிவு விரைவில்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படை குவிப்பு தீவிரம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
99 பார்வைகள்

ரொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் நடவடிக்கையைத் தொடங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஆயுதங்கள் மற்றும் படைத்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மட்டத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, ஈரானுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் ட்ரம்ப் முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. அலி காமெனீ தலைமையிலான ஈரான், அணுசக்தி திட்டங்களை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

2003ஆம் ஆண்டு ஈராக் போர்க்கு பின்னர் நடைபெறக்கூடிய மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக இது அமையக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. மத்திய கிழக்கு தளங்களுக்கு இரண்டு விமானம்தாங்கிக் கப்பல்கள், பல போர்க்கப்பல்கள், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

F-35, F-22, F-16 போன்ற மேம்பட்ட போர் விமானங்களும் அப்பகுதிக்குத் திரட்டப்பட்டுள்ளன. மேலும், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், ஈரான் இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் இறுதி முடிவு குறித்து உலகளாவிய கவனம் திரண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மாலைத்தீவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா விதிகளில் மாற்றம்!

மாலைத்தீவில் தொழில்வாய்ப்புகளுக்காகச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு, விசா விதிகளைப் புதுப்பிக்க அந்தநாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வணிக விசா அல்லது விசேட விசாவைப்…

89 0 0
உலக செய்திகள்

இந்தோனேஷிய காட்டுத் தீயினால் அண்டை நாடுகளும் பாதிப்பு

இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உருவான அடர்ந்த புகைமூட்டம், நாடு முழுவதும் பரவியுள்ளதுடன் மலேசியா, சிங்கப்பூர் மற்றும்…

70 0 0
உலக செய்திகள்

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்…

59 0 0
உலக செய்திகள்

இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது!

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த வானூர்தியில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலின்போது துணிச்சலுடனும் தொழில்முறை திறனுடனும் செயற்பட்ட இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Captain Smit…

101 0 0