உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக அந்தோனியா ரோமியோ நியமிக்கப்படுவதில் சர்ச்சை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
60 பார்வைகள்

பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ, நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாக பணியாற்றிய காலத்தில் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்பு நியூயோர்க்கிற்கான பிரித்தானிய தூதராக இருந்தபோது, ஊழியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதாகவும், பணியிடத்தில் பயம் மற்றும் கவலை நிலவிய சூழலை உருவாக்கியதாகவும் ஆவணங்கள் வெளிவந்துள்ளன.

மேலும், அரசாங்க நலன்களை விட தனிப்பட்ட சுய விளம்பரத்திற்கும் சமூக வலைத்தளச் செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை வழங்கியதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், இவ்விவகாரத்தில் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ முறைப்பாடு மட்டுமே கிடைத்ததாகவும், விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் முன்னாள் அதிகாரிகள்பல ஊழியர்கள் அவதிப்பட்டதாகக் கூறியுள்ள நிலையில், அக்காலகட்டத்தில் சுமார் 47 விழுக்காடு ஊழியர்கள் பணியிடத் துன்புறுத்தலை அனுபவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது உள்துறை அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றும் அந்தோனியா ரோமியோ, சவாலான பணிகளைச் செய்து முடிக்கும் திறமை கொண்டவர் என சிலர் பாராட்டினாலும், இத்தகைய சர்ச்சைகள் அவர் சிவில் சேவையின் மிக உயர்ந்த பதவியான அமைச்சரவை செயலாளர் பதவிக்கான நியமனத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0