உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
85 பார்வைகள்

இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) கீழ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவனம், மார்சேய் ஃபோஸ் துறைமுகம் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியப் பயணத்தின் போது கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இந்தியா–ஐரோப்பா வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு டெல்லி நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் அறிமுகமான IMEC வழித்தடம், கடல், ரயில், டிஜிட்டல் மற்றும் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் பன்முகப் போக்குவரத்து திட்டமாகும். தடையற்ற வர்த்தகப் போக்குவரத்தை எளிதாக்குதல் மற்றும் துறைமுகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும்.

ஒப்பந்தத்தின் படி, முந்த்ரா துறைமுகம் மற்றும் ஹசிராதுறைமுகம் இந்தியா–மேற்கு ஆசியா இணைப்புக்கான கிழக்கு நுழைவாயில்களாக அமையும்; மார்சேய் ஃபோஸ் துறைமுகம் ஐரோப்பாவிற்கான மேற்கு நுழைவாயிலாகச் செயல்படும். சுமார் 70 மில்லியன் டன் கூடுதல் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட இந்த இணைப்பு, இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சீனாவையும் வட கொரியாவையும் இணைக்கும் பாலம் திறந்து வைப்பு

அயல் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் மேம்பட்டு வரும் நிலையில், சீனாவையும் வட கொரியாவையும் இணைக்கும், நீண்டகாலமாகத் தாமதமான சாலைப் பாலம் திறக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள்…

77 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய வர்த்தகக் கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியைக் கொண்ட ‘GFS Pride’ என்ற கப்பல், கடற்கண்ணி வெடியில் சிக்கி மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் பயணம் செய்த 21…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்க கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: ஒருவர் ப@லி!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள ‘சிக்ஸ் ஃப்ளக்ஸ் ஓவர் ஜோர்ஜியா’ (Six Flags Over Georgia) கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்…

53 0 0
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பிபிசி வானொலி ஒலிபரப்புகளை இடைநிறுத்தியது தலிபான் அரசு!

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் நாடு முழுவதிலும் உள்ள எஃப்.எம் வானொலி நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிபிசி (BBC) செய்தி ஒலிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. பிபிசி நிறுவனம்…

73 0 0