உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சமன் ஏக்கநாயக்க பிணையில் விடுவிப்பு – கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்க்ரமசிங்க அவர்களின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவின் படி, தலா 2 மில்லியன் ரூபா மதிப்புடைய இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க வேண்டும் என நீதிவான் இசுரு நெத்திகுமார அறிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்க்ரமசிங்க அவர்களுக்கு எதிரான பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


2023 ஆம் ஆண்டு, ரணில் விக்க்ரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரிட்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்திற்கு 16.2 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.விசாரணையின் போது சமன் ஏக்கநாயக்கவின் சார்பில் முன்னிலையிலான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ பிணை கோரிக்கையை முன்வைத்தார். நீதிவான் அதை ஏற்றுக்கொண்டு நிபந்தனையுடன் பிணையை வழங்கினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0