மாந்தை கிழக்கில் பாலங்கள் அமைக்க அவசர முயற்சி – ஆளுநர் தெரிவிப்பு.!
மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் துண்டிப்பு மற்றும் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கும் வகையில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், அவற்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இடரால் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை பார்வையிடும் நோக்கில், ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று (18.02.2026) காலை நேரடி களப்பயணம் மேற்கொண்டனர்.மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் துண்டிப்பு மற்றும் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கும் வகையில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், அவற்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இடரால் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை பார்வையிடும் நோக்கில், ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று (18.02.2026) காலை நேரடி களப்பயணம் மேற்கொண்டனர்.பாண்டியன்குளம் – செல்வபுரம் பகுதியில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக விவசாயிகளால் கைவிடப்பட்டிருந்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தை ஆளுநர் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
விவசாயிகள் சம்மதம் அளித்தால், இலங்கை மின்சார சபைக்கு மின்சாரம் விற்பனை செய்யாத சூரியக்கலத் திட்டம் மூலம் திட்டத்தை மீள இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் பேசி இறுதி முடிவை அறிவிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.வன்னிவிளாங்குளம் – பனங்காமம்பற்று வீதியில் மூன்று இடங்களில் பாலங்கள் இல்லாததால் மழைக்காலங்களில் மாந்தை கிழக்கு பிரதேசம் முழுமையாகத் தனிமைப்படும் அபாயம் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த இடங்களை நேரில் ஆய்வு செய்த ஆளுநர், நீர்ப்பாசனத் திணைக்களமும் வீதி அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து மதிப்பீடு அறிக்கை தயாரிக்குமாறு உத்தரவிட்டார்.மேலும், புளியங்குளம் – குமரிக்குளம் வாய்க்காலில் செல்வபுரம் காட்டுக்கரை வீதியிலுள்ள பாலத்தை விரிவுபடுத்துவது மற்றும் வெள்ளநீர் மேவிப் பாயும் இடங்களில் புதிய பாலங்கள் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப ஆய்வு செய்து சாத்தியப்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தினார்.
நட்டாங்கண்டல் பிரதேச மருத்துவமனை மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையைப் பார்வையிட்ட ஆளுநர், சேதமடைந்த விடுதிகளை உடனடியாகச் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீள திறக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
பாண்டியன்குளத்தில் இந்தியா அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட முன்னோடி வீட்டுத் திட்டத்தில் பல வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுவதை கவனத்தில் கொண்டு, உரிய தரப்பினருடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
இக்களப்பயணத்திற்குப் பின்னர் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் பொதுமக்களின் குறைகேள் சந்திப்பும் நடைபெற்றது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


