உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கனமழையால் மக்கள் அவதி; தாழ்வுப் பகுதிகள் வெள்ள அபாயத்தில்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய சுழற்சி தாழ்வுப் பகுதியாக மாறி அதே இடத்தில் நீடித்து வருவதால், மழை மேலும் தொடரக்கூடும் என வானிலை அவதான நிலையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ள அபாய நிலையில் காணப்படுவதுடன், சில முக்கிய வீதிகளிலும் நீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியான அடைமழையால் மாவட்டத்தில் நடைபெற்று வந்த அறுவடைச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை பாதுகாப்பதில் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், முக்கிய நீர்த்தேக்கமான உன்னிச்சைகுளம் குளத்தின் மூன்று வான்கதவுகள் தலா இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லிமீட்டர், மைலம்பாவெளியில் 104.5 மில்லிமீட்டர், உன்னிச்சைப் பகுதியில் 111 மில்லிமீட்டர், நவகிரியில் 52 மில்லிமீட்டர், உறுகாமத்தில் 63.9 மில்லிமீட்டர், தும்பங்கேணியில் 70 மில்லிமீட்டர், பாசிக்குடாவில் 80 மில்லிமீட்டர் மற்றும் வாகனேரியில் 39.8 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0