உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தினர் பாராட்டு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், அண்மைக்கால சவால்களை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் காத்திரமான முயற்சிகளைச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பாராட்டியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே இதனைத் தெரிவித்தார்.

‘டித்வா’ சூறாவளிப் பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாகப் பலவீனமடைந்துள்ள சமூகங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதுடன், அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என ஜோர்ஜிவா சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தின் பின்னர் நாட்டை வழமைக்குக் கொண்டுவரச் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், பொருளாதார அபிவிருத்தியின் பயன்கள் அடிமட்ட மக்களை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அறிவை வளர்ப்பதோடு மட்டுமன்றி, தொழில் சந்தைக்குத் தேவையான திறன் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மையமாகக் கொண்ட கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் இணக்கம் வெளியிட்டனர்.

மேலும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை உறுதி செய்தல், சுற்றுலாத்துறையின் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மேம்படுத்துதல், நிலையான மற்றும் நீண்டகால முதலீடுகளை இலங்கைக்கு ஈர்த்தல் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளான அண்ட்ரியாஸ் பாயர், மார்த்தா வோல்டெமைக்கேல் ஆகியோருடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பிரதி ஆளுநர் கலாநிதி சி. அமரசேகர மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0