உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பங்களாதேஷின் புதிய பிரதமருக்கு அமைச்சர் நளிந்த நேரில் வாழ்த்து.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

பங்களாதேஷின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானை, இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்ற புதிய பிரதமரின் பதவியேற்பு விழாவில், இலங்கை அரசின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.

பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில், இலங்கை – பங்களாதேஷ் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் சுகாதாரத் துறைக்குத் தேவையான மருந்துப் பொருட்களைப் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட கவனம் செலுத்தினார். இது தொடர்பான வர்த்தக மேம்பாடுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சிக்குத் தங்களது உழைப்பின் மூலம் பங்களிப்பு வழங்கும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்து அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். இலங்கைத் தொழிலாளர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதாகப் பங்களாதேஷ் பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பானது தெற்காசியப் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் மனிதாபிமான உறவுகளைப் புதிய கட்டத்துக்கு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0