உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஊழல் கலாச்சாரத்தை மாற்றவே எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
56 பார்வைகள்

ஊழல்மிக்க அரசியல் கலாச்சாரம் காரணமாகவே மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கின்றார்கள் என்றும், அந்த நிலையை மாற்றிச் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கவே நாடாளுமன்ற ஓய்வூதிய இரத்துச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்’ மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,
“நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் தீர்மானம், வெறும் பிரபல்யத்திற்காகவோ அல்லது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவோ எடுக்கப்பட்ட ஒன்றல்ல. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவும், அவர்களின் ஆணைக்கு மதிப்பளித்துமே இந்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஓய்வூதியச் சட்டம், இதுவரை ஐந்து முறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் திருத்தங்கள் அனைத்தும் அரசியல்வாதிகளின் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டனவே தவிர, அவற்றால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் வேடிக்கையானவை. 1985 ஆம் ஆண்டு திருத்தத்தின்படி, தமக்கு விருப்பமான ஓய்வூதிய முறையைத் தெரிவு செய்யும் வசதி வழங்கப்பட்டது. அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது திருமணம் புரிந்தால், அவரது மனைவிக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. இத்தகைய சுயநலச் செயற்பாடுகளால்தான் மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் எதிர்க்கின்றார்கள்.

ஊழல்மிக்க அரசியல் கலாச்சாரத்தினால் இன்று ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தச் சூழலை மாற்றியமைத்து, ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கினால் மட்டுமே தகுதியுள்ளவர்கள் அரசியலுக்கு வருவார்கள். நாடும் முன்னேற்றமடையும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் எதிர்காலத்திலும் புதிய சட்டங்களை இயற்ற நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு…

42 0 0
இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

52 0 0
இலங்கை செய்திகள்

நுகர்வோருக்கு நிவாரணம்; வியாபாரிகளுக்கு புதிய நம்பிக்கை.!

இந்நாட்களில் பேலியாகொடை பிரதான மத்திய மீன் சந்தையின் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாய் தெற்கு மாகாணக் கடற்றொழில் மூலமும் அதிகளவிலான மீன், சந்தைக்கு…

56 0 0
இலங்கை செய்திகள்

விவசாயக் கடன் தருவதாகக் கூறி நிதி மோசடி; சந்தேகநபர் கைது.!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களை குறிவைத்து நுன் கடன் தருவதாக கூறி முற்பணம் வங்கியில் வைப்பிலிட கூறி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு…

50 0 0