இங்கிலாந்தில் சிறுவர் பாலி*யல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு.!
இங்கிலாந்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் 1,000 சந்தேக நபர்கள் இங்கிலாந்துப் பொலிஸார் மூலம் கைது செய்யப்பட்டுவருகின்றனர் என்று தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் 500–800 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டதாகக் கணிக்கப்பட்டது. குறிப்பாக, 2026 ஜனவரி மாதத்தின் ஒரே வாரத்தில் இங்கிலாந்து முழுவதும் 252 நபர்கள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 118 பேர் மீது குற்றச்சாட்டு, 35 பேருக்கு நீதிமன்றத்தில் தண்டனை, மற்றும் 407 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.குற்றவாளிகள் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சிறுவர்களை குற்றவழியில் ஈர்க்கும் பணிகளை அதிகளவில் செய்கின்றனர் என்று தேசிய குற்றவியல் நிறுவனம் பொதுநிலை பணிப்பாளர் ரோப் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.