உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கந்தளாய், வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சலகொடல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஒரே உந்துருளியில் மூன்று நண்பர்கள் பயணித்துக்கொண்டிருந்தபோது, உந்துருளி அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சீமெந்து கட்டடம் ஒன்றில் மோதியதுடன், அங்கிருந்த மரத்திலும் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உந்துருளியைச் செலுத்திய சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பன்சலகொடல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருடன் உந்துருளியில் பயணித்த ஏனைய இரு நண்பர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகக் கந்தளாய் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அளவுக்கு அதிகமான வேகமும், ஒரு உந்துருளியில் மூவர் பயணித்தமையுமே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வான் எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0