உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

குழந்தை ஒன்றை பிரசவித்த பாடசாலை மாணவி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக இருந்த கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 15ஆம் திகதி குழந்தையொன்றைப் பிரசவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்தச் சிறுமி இவ்வாறு பிரசவித்துள்ளதாக கேகாலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை சில காலத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் குடும்பத்தின் சுமையை தாய் சுமந்துள்ளார். அவர் பிரதேசத்தில் உள்ள சிறிய தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறித்து சம்பாதிக்கும் சிறிய தொகைப் பணத்தில் சிறுமியையும் மூத்த சகோதரனையும் பராமரித்து வந்துள்ளார்.

சிறுமியின் சகோதரன் வேலைக்காக கொழும்பு பிரதேசத்திற்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தான் இதற்கு முன்னர் ஒரு பாடசாலை மாணவருடன் காதல் உறவு வைத்திருந்ததாகவும், பின்னர் அதை நிறுத்திவிட்டதாகவும் தான் பெற்ற குழந்தை அந்த உறவின் விளைவுதான் என்பதை மாணவி நேற்று வெளிப்படுத்தியுள்ளார்.

சிறுமி அன்றைய தினம் காலையில் குழந்தையைப் பிரசவிக்கும் வரை தனது மகள் கர்ப்பமாக இருந்ததை தாய் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தை தற்போது கேகாலை பொது வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவுக்குட்பட்ட குறைமாதக் குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நடைபெறும் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு இந்த பாடசாலைச் சிறுமிக்கு வாய்ப்பளிக்கும் நோக்குடன் வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று அவரை வைத்தியசாலையிலிருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தக் குழந்தையை பிரசவிக்க காரணமாக இருந்த காதலனை பொலிஸார் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0