உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட ஐ.எம்.எப். பணிப்பாளர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

‘டித்வா’ சூறாவளி காரணமாகப் பாரிய மண்சரிவு அனர்த்தத்திற்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவதுர கிராமத்திற்குச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவித்தார்.

மாவதுர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததுடன், 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். பாதிப்புக்குள்ளான மக்களுடன் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடிய ஜோர்ஜிவா, அனர்த்தத்தின் போது அரசாங்கம் முன்னெடுத்த துரித மீட்பு நடவடிக்கைகளைப் பாராட்டினார். அத்துடன், இக்கட்டான சூழலில் மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை மற்றும் தைரியம் முன்மாதிரியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களிடம் உரையாடிய கிறிஸ்டலினா ஜோர்ஜிவா,

“இன்று இங்கு வாழும் சிறுவர்கள், நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்குவார்கள். இளைய தலைமுறையினரை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்தக் கண்காணிப்பு விஜயத்தின் போது, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0