உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையை பிராந்திய ஏற்றுமதி மையமாக மாற்றும் ‘ஜப்பான் வழித்தடம்’ – சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளைப் புதியதொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் வகையில், முன்மொழியப்பட்ட ‘இலங்கை – ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை’ (Sri Lanka-Japan Export Industrial Corridor) நிறுவுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜப்பானிய பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மட்சுவோ டகெஹிகோ (Matsuo Takehiko) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது. ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மேலதிக சாத்தியக்கூறுகளை ஆராய ஜப்பானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டுத் தொழில்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த முன்மொழியப்பட்ட வழித்தடத்தின் மூலம், சர்வதேச ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்ட பெருமளவிலான உற்பத்திகளுக்கான முதலீடுகளை இலங்கைக்கு ஈர்ப்பதே பிரதான நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்.

பிராந்திய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.

சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் முதலீட்டுத் துறையில் ஜப்பானிய வர்த்தகச் சமூகத்தினரிடையே மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசொமாடா (Akio Isomata), ஜப்பான் – இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் புமிஹிகோ கொபயாஷி (Fumihiko Kobayashi) உள்ளிட்ட ஜப்பானியப் பிரதிநிதிகளும், இலங்கையின் சார்பில் வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0