உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புதுடில்லியில் அநுரவுக்கு அமோக வரவேற்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லியைச் சென்றடைந்தார்.

நேற்று மாலை புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதியை, இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சௌதரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று உற்சாகமாக வரவேற்றனர்.

மனிதகுலத்தின் நன்மைக்காகச் செயற்கை நுண்ணறிவை (AI) எவ்வாறு பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதே இந்த ‘AI Impact Summit 2026’ மாநாட்டின் பிரதான நோக்கமாகும். புதுடில்லியில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை வியாழக்கிழமை விசேட உரையாற்றவுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகள் குறித்து அவர் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில், டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசுரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேசத் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதில் இந்த விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0