உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க வரி கட்டுப்பாடுகளைத் தாண்டி கனடா புதிய கூட்டாண்மைகளை உருவாக்குகிறது.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
58 பார்வைகள்

கனடா, இந்தியாவுடன் பொருளாதார கூட்டாண்மையை விரிவுபடுத்தி, ஒத்துழைப்புகளை பல்துறை பரப்புவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கிடையில், கனடா பிரதமர் மார்க் கார்னி எதிர்வரும் மார்ச் மாத முற்பகுதியில் புதுடில்லி வரவேற்கப்படவிருப்பதாகவும், இந்தியாவுடன் விரிவான பொருளாதார ஒப்பந்தங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளை ஆராயவிருப்பதாக கனேடிய அதிகாரி விக்டர் ஃபெடெலி தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா கனடாவை பொருளாதார வரிவிதிகளால் பாதித்த பின்னர், அமெரிக்காவைத் தாண்டி கூட்டாண்மைகளை பன்முகப்படுத்தும் கனடாவின் முயற்சியில் இந்த விஜயம் முக்கியமானது.மேலும், கடந்த வாரம் மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரும், கனடா வௌிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த்தும் இரு தரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் வழிகளைக் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தியுள்ள இவர்கள், பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கான எதிர்காலப் பணிகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0